History

குமரிக்கண்டத்தில் இருந்த மக்கள் இப்போது எங்கே?

திருக்குரலில் தென்புலத்தார் என்று கூறியது யாரை பற்றி தெரியுமா ?  எந்தக்கண்டம் இருந்த்தது என்று போராடிக்கொண்டு இருக்கிறோமோ… அது அழிந்து போனதற்கான ஆதாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதில் வாழ்ந்த இனம் தமிழ் இனம் என நிரூபிக்க போராடிக்கொண்டிருக்கிறோம்.

திருக்குரலில் கூட திருவள்ளுவரால் தென்புலத்தோர் என்று, இறைவனுக்கு அடுத்த படியாக வணங்கத்தக்கவர் வரிசையில் குமரிக்கண்ட வாசிகளை வைக்கிறார். அதுக்கு காரணம் என்ன தெரியுமா ? குமரிக்கண்டத்தில் வசித்த பல நூறாயிரம் மக்கள் அவர்கள் காலத்தில் கண நேரத்தில் அந்த காலத்தில் கடல் ஊழி என்று அழைக்கப்பட்ட ( சுனாமி ) கடல் அலைகளின் தாக்கத்தினால் உயிரிழந்தார்கள்.

தெற்கு திசையை கூற்றுவன் திசை என்றும் கூறுகிறார்கள். குமரிக்கண்டத்தில் தமிழ்தான் புழக்கத்தில் இருந்த்தது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. முதல் கடல் ஆழி தோன்றிய காலத்தில் குமரிக்கண்டத்தில் இருந்த்து பலர் வெளியேறி பல நாடுகளில் குடியேறினார்கள். இத்தகைய சுனாமிகள் குமரிக்கண்டத்தில் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணமே இருந்த்தது. முதல் சுனாமி ஏறத்தாழ 52,000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்திருக்கலாம் என ஆராச்சிகள் கூறுகின்றன. அவ்வப்போது குமரிக்கண்டத்தில் நிகழ்ந்த சுனாமி காரணமாக பலர் ஆவுஸ்த்திட்ரேலியா, அமேரிக்கா மற்றும் ஆபிரிக்க கண்டத்திலும் குடியேறி இருப்பதற்கான சான்றுகள் பல நம் இடத்தில் ஊள்ளது.

அவ்வாறு குடியேறியவர்கள் தான் அவுஸ்ரெலியாவின் பழங்குடி மக்கள், அமேரிக்காவின் செவ் இந்திய மக்கள், மற்றும் ஆபிரிக்காவின் பழங்குடியினருமாவார்கள். அவர்கள் பேசுகின்ற மொழிகளிலும் தமிழ் சொற்கள் ஏராளமாக காணப்படுகின்றன. குமரிக்கண்டத்தில் இருந்து பலர் வட இந்தியா போன்ற இடங்களிலும் குடியேறியுள்ளார்கள்.அவர்கள் இந்தியாவுக்கு வடகிளக்கே இருக்கும் தாய்லாந்து, இந்தோனேசியா, மாலேசியா, சீனா முதலிய நாடுகளிலும் குடியேறி இருக்கிறார்கள். இந்தியாவுக்கு வடக்கிலும் வடமேற்கிலும், மத்திய ஆசிய, மேற்கு ஆசியா நாடுகளிலும் குடியேறி ஈருக்கிறார்கள்.இவர்கள் பேசுகின்ற மொழி குமரிக்கண்ட மொழியிலும் சிறிது மாற்றம் கொண்டிருந்தது.

இவ்வாறு குடியேறிய நம் பழங்குடி மக்கள் தமிழ் மொழியுடன் அவர்கள் சென்று குடியேறிய நாடுகளில் புழக்கத்தில் இருந்த்த மொழியையும் பேச வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்கள். உங்களுக்கே தெரிந்திருக்கும் இப்பொது தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசும் மொழி பற்றி இற்றைக்கு 3000-4000 ஆண்டுகழுக்கு பின்னர் நம் சந்ததியினர் ஆய்வுகள் மேற்கொண்டு நாம் பேசும் தமிங்கிளிசை என்ன பெயர் கொண்டு அழைக்கப் போகிறார்களோ தெரியவில்லை. இப்படி அழிந்து போன தமிழர் சாம்ராஜியம் தான் இன்று நாம் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறிய சாம்ராஜ்யங்களாக இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் காணக்கூடியதாக இருக்கின்றது. பல்வேறு காரணங்களாலும் கட்டாயங்களாலும் புலம் பெயர்ந்து அமேரிக்கா, அவுஸ்த்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா போன்ற பல்வேறு நாடுகளில் குடியமர்ந்த தமிழ் சமுதாயம் ஒரு கால கட்டத்திற்கு பின் நமது இனத்தவர்களின் அடயாளம் மங்கி அவர்கள் சந்ததியினரை அடயாளம் காணமுடியாத நிகழ்வுகழும் கூட நடக்கலாம்.

பழங்கால தமிழர்கள் அதாவது குமரிக்கண்டத்தில் வாழ்ந்தவர்கள் நிலவை “உவா” என்றும் உவவு மதி என்றும் அழைத்து வந்தார்கள். ஏன் மாததை கூட உவா என்று தான் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.இந்தச்சொல்லே மேற்கு ஆசியாவிலும் மறும் பல இடங்களிலும் “உ” என்ற எழுத்து மறைந்து “வாவு” என்று திரிவடைந்திருக்கிறது.

இப்போது வழக்கத்தில் இருக்கும் “கண்” என்ற சொல்லுக்கு 30க்கும் மேற்பட்ட ஒத்த சொற்கள் இருக்கின்றன.“புலம்” என்பது கண்ணைக்குறிக்கும் பழம் தமிழ்ச்சொல் என்பதை பல மொழி ஆய்வாழர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.இதை மேலும் தெழிவாக பார்க்க முனைந்தால், “புலன் விசாரணை” என்றால் கண்ணால் பார்த்து விசாரணை செய்யப்படுவது இதனால் புலன் விசாரணை என்று கூறுகின்றார்கள்.

ஆவுஸ்திரேலியா பழங்குடியினர் இன்றும் “கண்” என்ற சொல்லை பயன்படுத்தாமல் “புலம்” என்ற சொல்லையே பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. செவ்விந்தியர்கள் அம்மா என்ற சொல்லை அன்னை என்று பயன்படித்துகிறார்கள். ஆனால் நாமோ அன்னையை வெறும் இலக்கிய சொல்லாக மாற்றி அதை நாடகங்களிலும், காவியங்களிலும், கதைகளிலும் மட்டுமே பயன்படுத்துகின்றோம்.அந்த காலத்தில் குமேரிக்கண்டத்தில் இருந்து ஆபிரிக்காவில் குடியேறிய நம் பழம் குடிமக்கள் இன்றும் அதி அற்புதமான தமிழ் சொற்காளையே உபயோகிகிறார்கள்.

குமரிக்கண்ட தமிழ் தொடக்க காலத்தில் ஒரு சொல்லை ஒரு எழுத்தாக பயன்படுதினார்கள். உதாரணம் பார்த்தால்

அவன் அவள் என்பதை  “அ”  என்றும்

அது என்பதை  “ஆ” என்றும்

இவன் என்பதை “இ” என்றும்

இவள் என்பதை “ஈ” என்றும்

இது என்பதை “ஒ” என்றும்

சொற்களை எழுத்தாக பயன்படுத்தியுள்ளார்கள். சில வேழைகளில் இந்த ஒருமைச் சொற்களே பன்மை சொற்கழுக்கும் பயன்பட்டன.ஆபிரிக்க மொழிகளில் இவை அனைத்தும் இடப்பெயர்களாகவும் சுட்டுப்பெயர்களாகவும் இன்னமும் இடம்பெற்று வருகின்றன. இடைக்காலத்தில் அவன், அவள், அது, இவன், இவள், இது, தாம், அவர், இவர், அவை, இவை என்ற பொருளில் பயன்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ஆபிரிக்க மொழிகளில் இன்னும் இடம்பெற்று இருக்கின்றன.

சீன மொழியிலும் கூட இவை அனைத்தும் வழக்கத்தில் உள்ளன.“தானீ” என்ற தெலுங்குச்சொல் தமிழில் ஒரு பழமையான சொல்.சமஸ்கிரித மொழியிலும் குமரிக்கண்ட தமிழாதிக்கம் இருக்கின்றது.இவ்வளவு ஏன் ?

சீன மொழியில் இறச்சி” என்னும் தமிழ் சொல் “றச்சி” எனவும்

நிறங்கள் என்னும் தமிழ்ச்சொல் “றங்” எனவும்

பூ என்ற தமிழ்ச் சொல் ஹூ என்றும் புழக்கத்தில் உள்ளன.

ப” என்ற தமிழ் சொல்லை “ஹ” என்று கன்னட மொழியில் உபயோகிகிறார்கள். இதே போன்று பல தமிழ் சொற்கள் கன்னடத்தில் சிதைந்து ஒலிக்கின்றன.

எடுத்துக்காட்டாக

பத்து என்பதை ஹத்து என்றும்

பல் என்பதை ஹல்லு என்றும் கன்னட மொழியில் இன்னும் வழக்கத்தில் இருக்கிறது.

கண் என்ற தமிழ்ச்சொல் “கண்” என்றும் “காண்” என்ற தமிழ்ச்சொல் காண் என்றும் இன்னும் சீன மொழியில் இடம்பெறுகிறது.சீன மொழியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் சொற்கள் திரிவடைந்த்து உச்சரிக்கபடுகின்றன.கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட தமிழ் சொற்கள் இன்னும் சீன மொழியில் வழக்கத்தில் உள்ளன.இந்த அனைத்து சொற்களையும் சீன மொழியில் இருந்து நீக்கிவிட்டால் அம் மொழி இயங்காது என்பதே உண்மை.தமிழில் குதிரையை “மா” என்று தான் கூறுகிறார்கள். அதே போன்று தாய்லந்திலும், சீனாவிலும் குதிரையை “மா” என்றுதான் கூறுகிறார்கள்.

மேற்கு ஆசிய மக்களுக்கு எழுதுவதற்கு பனையோலை கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் எழிதாகவும் மலிவாகவும் கிடைக்கும் ஈரக்களி மண்ணில் எழுதியிருக்கிறார்கள்.ஈரக்களி மண்ணை ஏடு வடிவத்தில் வடிவமத்து அதில் நீண்ட மூங்கில் தடி அல்லது மரக்குச்சி மூலம் எழுதியிருக்கிறார்கள்.

தமது கைத்தடம் ஈரக்களிமண்ணில் படாமல் இருப்பதற்காக, இடமிருந்து வலமக எழுதுவை காட்டிலும் வலமிரிந்த்து இடமாக எழுதுவது இலகுவாக இருந்ததால் இவர்கள் வலமிருந்த்து இடமாக எழுதியமையால் தமிழ் எழுத்துக்கள் திரிவடைந்த்து காணப்படுகிறது. இந்த இரு கருத்துக்கழையும் உள்ளடக்கியது தான் விம்ப விதி என்று அழைக்கப்படுகிறது. அதை பிறழ்ச்சி விதி என்றும் அழைப்பர்கள்.இது உலக மொழி அறிஞ்ஞர்களின் மொழியியலில் இது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு.

வ்  + வா என்பது “வா”

வட இந்தியர்கள் வல இடமாக எழுதியயதால்

ஆ + வ்  என்பது “ஆவ்” என்றாகியது. ஆவோ

இதேபோல் அரபி மொழியில் ஜ் என்பதை முன்வைத்து

ஜ் + ஆவ் என்று “ஜ்ஆவ்” என்று அழைகின்றனர்.

ம் +   என்றால்  மா, மா என்றால் மாங்கனியை குறிக்கின்றது. ஆனால் வட இந்தியர்கள் ஆம் என்கிறார்கள். சமஸ்கிரித மொழியிலும் ஆம்ரா என்றால் மாம்பழம் என்று பொருள்.

அல்ல என்ற தமிழ் சொல் அரபி மொழியில் திரிவடைந்து “லா” என்று மாறி அது இல்லை என்ற பொருழையே தருகிறது. தமிழில் பண்டுதொட்டு பெண்களை பெண்டு என்று அழைத்துள்ளார்கள் இது திரிவடைந்த்து ” பின்ட்” என்று அரபி மொழியில் அதே அர்த்தத்தை கொடுக்கிறது.அதே போல் எழில் என்னும் தமிழ்ச்சொல் அரபி மொழியில் ஜமீல் என்று திரிவடைந்துள்ளது.ஏன்டா ஏன்டி என்று நாம் அழைப்பதை போன்று அரபு மொழியில் அந்தா, அந்தி என புழக்கத்தில் உள்ளது.

நம் தமிழின் வசவுச்சொற்களைக்கூட உலக மொழிகள் தமது இல்லக்கிய சொல்லாக கருதுகின்றன.ஏனென்றால் உலக இலக்கணங்கள் எல்லாம் தமிழில் இருந்து பெறப்பட்டவை தான் என்றால் மிகையாகாது.இவ்வறாக பல செய்திகள் ஆதாரங்கள் ஒவ்வொன்றாக குமரிக்கண்ட தமிழிற்கும் அங்கிருந்து உலகம் முழுவதும் பரவிய குமரிக்கண்ட தமிழர்கழுக்கும் இருக்கும் சான்றுகள் ஒன்றுடன் ஓன்று ஒத்து போகின்றன.

ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும், குமரிக்கண்டத்தில் இருந்து தமிழர்கள் மட்டும் அல்ல தம் தாய்மொழி கொண்டு பல கண்டங்கள் சென்று அங்கிருந்த மக்களோடு பழகி தமிழ் மொழியை அவர்கள் மொழியோடு சேர்த்து அதை வாழவைத்துத்தான் இருக்கிறார்கள்.

இந்த உலகில் எங்கு சென்றாலும் எந்த நாட்டுக்கு சென்றாலும் அவர்களின் ஒரு சொல்லிலாவது தமிழ் மொழி இணைந்திருக்குமாயின் நமக்கு பெருமையே…

என்ன தவம் செய்தோமோ தமிழனாய் பிறப்பதற்கு…

வாழ்க தமிழ் வழர்க தமிழ் மொழி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button